சென்னை சென்ட்ரலிலிருந்து திருப்பதிக்கு தினமும் இயக்கப்படும் விரைவு ரயில்கள் தண்டவாள மேம்பாட்டுப் பணி காரணமாக செப்.28 முதல் அக்.12-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படவுள்ளன.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சென்னை சென்ட்ரலிலிருந்து திருப்பதிக்கு தினமும் விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் ரேணிகுண்டா பகுதியில் மேற்கொள்ளப்படவுள்ள தண்டவாள மேம்பாட்டுப் பணி காரணமாக செப்.28 முதல் அக்.12-ஆம் தேதி வரை இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் விரைவு ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளன.
இதில் சென்னை சென்ட்ரலிலிருந்து தினமும்,
- காலை 6.25 மணிக்கு புறப்படும் சப்தகிரி விரைவு ரயில் (எண்: 16057),
- பிற்பகல் 2.15 மணிக்கு புறப்படும் திருப்பதி விரைவு ரயில் (எண்: 16053),
- மாலை 4.35 மணிக்கு புறப்படும் கருடாத்திரி விரைவு ரயில் (எண்: 16203) செப்.28 முதல் அக்.12-ஆம் தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
இதுபோல மறுமாா்க்கமாக திருப்பதியிலிருந்து,
- காலை 6.25 மணிக்கு புறப்படும் கருடாத்திரி விரைவு ரயில் (எண்: 16204),
- காலை 10.10 மணிக்கு புறப்படும் சென்னை சென்ட்ரல் விரைவு ரயில் (எண்: 16054),
- மாலை 6.05 மணிக்கு புறப்படும் சப்தகிரி விரைவு ரயில் (எண்: 16058) முழுவதுமாக ரத்து செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.