pa.vijayபிரபல திரைப்பட பாடலாசிரியரான பா.விஜய் நடித்து இயக்கிய “ஸ்ட்ராபெர்ரி’  திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி அனைத்து பத்திரிகைகளின் பாராட்டுக்களை பெற்று சென்னை உள்பட தமிழகம் முழுவதிலும் உள்ள தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளரும், இயக்குனரும், நாயகனுமாகிய பா.விஜய் ரசிகர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

இந்த படத்தின் கதாநாயகன் நான்தான் என்று கூறப்பட்டாலும் உண்மையில் இந்த படத்தின் நாயகன் சமுத்திரக்கனிதான் என்று சமீபத்தில் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் கூறிய பா.விஜய், இந்த படத்தின் வெற்றிக்கு ரோபோ சங்கரின் அருமையான நடிப்பும் ஒரு காரணம் என்று கூறினார்.

மேலும் இந்த படம் மற்ற பேய்ப்படங்கள் போல திகில் மற்றும் காமெடிக்காக தயாரிக்கவில்லை என்றும் ஒரு நல்ல மெசேஜ் மக்களிடம் போய் சேரவேண்டும் என்பதற்காகவே இந்த படத்தை இயக்கி நடித்ததாகவும் பா.விஜய் கூறினார்.

மேலும் இந்த படத்தின் வெற்றியை அடுத்து, ஸ்ட்ராபெர்ரி 2′ படத்தை விரைவில் இயக்கவுள்ளதாகவும், இரண்டாம் பாகத்திற்கான திரைக்கதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் பா.விஜய் கூறினார். ஆனால், “ஸ்ட்ராபெர்ரி 2′ திரைப்படம், முதல் பாகம் போல் பேய்க்கதையாக இருக்காது என்றும் இந்த படம் முழுக்க முழுக்க ‘மை டியர் குட்டிச்சாத்தான்’ பாணியில் மந்திரம், மாயாஜாலம் போன்ற குழந்தைகளை கவரும் அம்சங்கள் அதிகம் இருக்கும் என்றும் அவர் தன்னுடைய பேட்டியில் மேலும் தெரிவித்தார்.

English Summary:Coming Soon Strawberry-2: Pa.Vijay Information.