sivakarthikeyan_shrutihaasaரஜினிமுருகன்’ படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் நடித்து வரும் புதிய படம் ஒன்றை அறிமுக இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில் இந்த படத்தின் நாயகி தேடும் படலம் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

முதலில் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தா அல்லது ஷாமிலி நடிப்பார் என கூறப்பட்டது. ஆனால் தற்போது விஜய்யுடன் ‘புலி’, அஜீத்துடன் ‘தல 56’ மற்றும் சூர்யாவுடன் ‘சிங்கம் 3’ ஆகிய படங்களின் நாயகியான ஸ்ருதிஹாசனுடன் படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வமான தகவல் வெளிவரும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ஸ்ருதிஹாசன் தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பல படங்களில் பிசியாக இருந்தாலும் சிவகார்த்திகேயனுடன் நடிக்க ஆவலுடன் இருப்பதாகவும், ஏற்கனவே ‘3’ படத்தில் நடித்தபோதே சிவகார்த்திகேயனுடன் நல்ல நட்பில் இருந்த ஸ்ருதிஹாசன், எப்படியாவது கால்ஷீட் தேதியை அட்ஜஸ்ட் செய்து சிவகார்த்திகேயன் படத்திற்கு ஓகே சொல்லுவார் என கூறப்படுகிறது.

பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

English Summary: Sivakarthikeyan Pair of Sruthi haasan?