வேளச்சேரி-பரங்கிமலை ரயில் நிலையங்களை இணைப்பதற்கான பறக்கும் ரயில் வழித் தடத்தில் 3 இரும்பு தூண்கள் அமைக்கப்பட்டுஉள்ள நிலையில், எஞ்சிய 3 இரும்பு தூண்கள் அமைக்கும் பணி நேற்று தொடங்கியது.

சென்னை கடற்கரை – வேளச்சேரி பறக்கும் ரயிலைபரங்கிமலை வரை நீட்டிக்க திட்டமிடப்பட்டது.இதன்படி, வேளச்சேரி-பரங்கிமலை இடையே உள்ள 5 கி.மீ. துாரத்தை இணைக்கும் வகையில், மேம்பால ரயில் பாதை திட்டப்பணி 2008-ல் தொடங்கப்பட்டன.

நிலம் கையகப்படுத்தும் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டதையடுத்து, இந்த தடத்தில் கடந்த ஆண்டு முதல் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. மொத்தம் உள்ள 5 கி.மீ. தூரத்தில் 4.5 கி.மீ.தூரத்துக்கு 167 தூண்களுடன் ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இப்பாதையில் புழுதிவாக்கம், ஆதம்பாக்கம், வாணுவம்பேட்டை ஆகிய இடங்களில் ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன.

இந்நிலையில், பரங்கிமலை ரயில் நிலையத்தில் இருந்து வேளச்சேரி மேம்பால பாதையை இணைக்கும் வகையில், அங்குள்ள ரயில் பாதைக்கு மேல், இரும்பு தூண்கள் அமைக்கும் பணி நேற்றுமுன்தினம் தொடங்கியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *