கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வரும் மே 1-ம் தேதியில் இருந்து 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்புகளை தடுக்க கடந்த ஜனவரி16-ம் தேதி முதல் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய இரு தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

முதற்கட்டமாக முன்கள பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் ஆகியோருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *