லஞ்சம் மற்றும் ஊழலை ஒழிப்பதில் உண்மையாகவே அக்கறை கொண்டிருக்கும் மிகச்சில அரசியல்வாதிகளில் ஒருவர் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் சமீபத்தில் வெளியான லஞ்சம், ஊழலை ஒழிக்கும் திரைக்கதை கொண்ட ‘கப்பார் இஸ் பேக்’ படத்தை பார்த்துவிட்டு, படக்குழுவினர்களுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் பாராட்டு தெரிவித்துள்ளார்.

அரவிந்த் கெஜ்ரிவால் இன்று தனது டுவிட்டரில் கூறும்போது, ‘கப்பார் இஸ் பேக் படம் பார்த்தேன். எல்லோரும் பார்க்க வேண்டிய மிக அற்புதமான படம்’ என்று கூறியுள்ளார்.

இந்த திரைப்படம் தமிழில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய்காந்த் நடித்த ‘ரமணா’ நடித்த படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. அக்சயகுமார், ஸ்ருதிஹாசன், கரீனாகபூர் மற்றும் பலர் நடித்திருந்த இந்த படம் கடந்த மே 1ஆம் தேதி ரிலீஸாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. ரிலீசான முதல் நாளே இந்த படம் ரூ.4 கோடி வசூல் செய்து சாதனை புரிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

English Summary: Delhi Chief Minister Arvind Kejriwal praises the Film “Gabbar is Back” starred by Aksheykumar, Shruthihasan, Kareena Kapur.