தீபாவளி இனிப்புகளுக்கான சமையல் குறிப்புகள்:

1. குலாப் ஜாமுன்

 • தேவையான பொருட்கள்:
 • 500 கிராம் குலோப் ஜாம் மாவு
 • 700 கிராம் சர்க்கரை
 • நெய் தேவையான அளவு
 • ஏலக்காய் தூள் தேவையான அளவு
 • பிஸ்தா தேவையான அளவு

செய்முறை:

முதலில் குலாப் ஜாமூன் பவுடரை தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ளவும் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் தேய்த்து அதில் உருண்டையை உருட்டி கொள்ளவும். பிறகு ஒரு பாத்திரத்தில் பிஸ்தாவை கொட்டி தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். அதில் சிறிது ஏலக்காய் பொடியை சேர்க்கவும். கால் கிலோ நெய் பாதியை ஊற்றி அதில் 2 அல்லது 3 உருண்டைகளைப் போட்டு உருண்டைகள் அனைத்துப் பக்கமும் வேகும் வகையில் உருட்டிக் கொண்டே இருங்கள்.
சர்க்கரை பாகு தயாரானதும் அதில் பொரித்த ஜாமுன் உருண்டைகளைப் போட்டு குறைந்தது 5 மணி நேரம் ஊறவிடவும். பாகு நன்கு சூடாக இருக்கும் போதே, வாணலியில் குலாப் ஜாமூனை பொரித்து எடுத்து போட்டுவிட்டால், பாகு ஆறியதுமே ஜாமூன் தயாராகிவிடும்.

2. அசோகா அல்வா

தேவையான பொருட்கள்:

 • 1 கப் பாசிப்பருப்பு (200 grams)
 • 2 கப் சர்க்கரை (400 grams)
 • 3/4 கப் நெய்
 • 10 முந்திரிப்பருப்பு
 • 4 தேக்கரண்டி கோதுமை மாவு
 • 1 சிட்டிகை ஆரஞ்சு நிறம்
 • 1/2 தேக்கரண்டி ஏலக்காய்த்தூள்

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் பருப்பு மூழ்கும் வரை தண்ணீர் விட்டு நிதானமான தீயில் வேக விடவும். பாத்திரத்தில் ஒரு கோப்பை நெய் விட்டு, அதில் முந்திரி திராட்சையை வறுத்து எடுத்து வைக்கவும். அந்த நெய்யில் கோதுமை – மைதா மாவு கலவையை சேர்த்து வறுக்கவும்.
இந்தப் பதத்தில் வேக வைத்த பருப்புச் சேர்த்து கிளறவும். பருப்பு நன்கு மசிந்து மாவுடன் கலக்கும்போது சர்க்கரையையும் கேசரி பொடியையும் சேர்த்து கைவிடாமல் கிளறவும். வறுத்து வைத்துள்ள முந்திரி திராட்சையும், ஏலக்காய் பொடியும், மீதமுள்ள நெய்யும் சேர்த்துக் கிளறி இறக்கவும். சுவையான அசோகா ரெடி.

3. தேங்காய் பால் முறுக்கு

தேவையான பொருட்கள்:

 • 1 கிலோ பச்சரிசி மாவு
 • 200 கிராம் வறுத்து அரைத்த உளுந்தமாவு
 • 200 கிராம் பொட்டுகடலைமாவு
 • 1 ஸ்பூன் பெருங்காயத்தூள்
 • 2 ஸ்பூன் சீரகம்(அ) எள்
 • 1 கப் தேங்காய்பால்
 • தேவையான அளவுஉப்பு
 • எண்ணெய் பொரிப்பதற்கு.
 • 4 ஸ்பூன் வெண்ணை

செய்முறை:

உளுந்து மாவு 1 பங்குக்கு 4 பங்கு அரிசி மாவு சேர்த்தால் முருக்கு மொறு மொறுப்பாக இருக்கும்.
மென்மையாக முறுக்கு செய்ய சிறிதளவு வெண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம்.
வெண்ணை அதிகமாக சேர்த்தால் முறுக்கு உடைய வாய்ப்பிருக்கிறது.
உளுந்து மாவு, தேங்காய் பால் வைத்து வீட்டிலேயே செய்யும் பொழுது அதிக சுவையுடன் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

4. சாக்லேட் பர்ப்பி

binary comment

தேவையான பொருட்கள்:

 • நெய் – ¼ கப் – 55g
 • பால் – ½ கப் – 125ml
 • பால் பவுடர் – 2 கப் – 200g
 • சர்க்கரை ( பொடித்தது) – ⅓ கப் – 65g
 • ஏலக்காய் பொடி – ¼ தேக்கரண்டி
 • கொக்கோ பவுடர் – 2 மேஜைக்கரண்டி

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் ¼ கப் நெய் சேர்த்துக் கொள்ளவும். ½ கப் காய்ச்சி ஆறவைத்த பால் சேர்த்துக் கொள்ளவும். 1 கப் பால் பவுடர் சேர்த்துக் கிளறவும். கெட்டியானதும் ⅓ கப் பொடித்த சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும். 1/4 தேக்கரண்டி ஏலக்காய் பொடி சேர்த்துக் கொள்ளவும். பால்கோவா உருண்டை ஒட்டாமல் வந்தால் தயாராகிவிட்டது ஒரு பாத்திரத்தில் நெய் தடவி பால் கோவாவில் பாதியை மட்டும் வைத்து கரண்டியால் ஷேப் செய்யவும். 2 மேஜைக்கரண்டி கொக்கோ பவுடர் சேர்த்துக் கொள்ளவும். கீழே உள்ள லேயரின் மேல் இதனை வைக்கவும். மூன்று மணி நேரம் பிரிட்ஜில் வைக்கவும். சுவையான சாக்லேட் பர்ஃபி தயார்.

5. லட்டு

தேவையானவை:

 • கடலை மாவு – 200 கிராம்,
 • சர்க்கரை – 350 கிராம்,
 • எண்ணெய் – தேவையான அளவு,
 • முந்திரி, திராட்சை – தலா 20,
 • லவங்கம் – 8,
 • டைமண்ட் கல்கண்டு – 15,
 • பச்சைக் கற்பூரம் – ஒரு சிட்டிகை,
 • முழு ஏலக்காய் – 5,
 • பால் – ஒரு டீஸ்பூன்,
 • கேசரி கலர் – சிறிதளவு.

செய்முறை:

சர்க்கரையில் 50 மில்லி நீர்விட்டு சூடாக்கவும். கொதிக்கும்போது பால் விட்டு அழுக்கு நீக்கி, கேசரி கலர் சேர்த்து பாகு காய்ச்சி இறக்கவும். கடலை மாவை நீர்விட்டு பஜ்ஜி மாவு போல் கெட்டியாக கரைக்கவும். எண்ணெயை சூடாக்கி, மாவை லட்டு தேய்க்கும் கரண்டியில் விட்டு எண்ணெயில் விழும்படி தேய்த்து, முத்து முத்தாகப் பொரித்து பாகில் சேர்க்கவும். முந்திரி, திராட்சை, லவங்கம் இவற்றை பொரித்து முழு ஏலக்காய், டைமண்ட் கல்கண்டு, பச்சைக் கற்பூரம் சேர்த்து, சர்க்கரை பாகு – பூந்தி கலவையில் கொட்டிக் கிளறவும். கை பொறுக்கும் சூட்டில் லட்டு பிடிக்கவும்.

6. மைசூர்பாகு

தேவையானவை:

 • கடலை மாவு – 100 கிராம்,
 • சர்க்கரை – 300 கிராம்,
 • நெய் – 200

செய்முறை:

அடிகனமான பாத்திரத்தில் சர்க்கரையுடன் 50 மில்லி தண்ணீர் சேர்த்துக் கரையவிடவும். வேறொரு அடுப்பில் நெய்யை சூடாக்கிக்கொள்ளவும். சர்க்கரை கரைந்து முத்து பாகு பதம் வந்தவுடன் ஒரு கை கடலை மாவு, சிறிது சூடான நெய் என ஒன்று மாற்றி மாற்றி சேர்த்துக் கிளறிக்கொண்டே இருக்கவும். கலவை பூத்து (பொற பொற என்று) வருகையில் இறக்கி, நெய் தடவிய டிரேயில் கொட்டி, சிறிது சூடாக இருக்கையில் வில்லைகள் போடவும்.

7. ஜாங்கிரி

தேவையானவை:

 • முழு உளுந்து – 200 கிராம்,
 • அரிசி – ஒரு டீஸ்பூன்,
 • சர்க்கரை – 300 கிராம்,
 • கேசரி கலர் அல்லது மஞ்சள் ஃபுட் கலர் – சிறிதளவு,
 • ஏலக்காய் எசன்ஸ் அல்லது ரோஸ் எசன்ஸ் – சில துளிகள்,
 • சீவிய முந்திரி – சிறிதளவு,
 • எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

உளுந்தை களைந்து அரிசியுடன் அரை மணி ஊறவிட்டு கிரைண்டரில் பொங்க பொங்க அரைத்து (கெட்டியாக), ஃபுட் கலர் சேர்க்கவும். சர்க்கரையுடன், அது கரையும் அளவு நீர் விட்டு, பிசுக்கு பதத்தில் பாகு காய்ச்சி, அகலமான பேசின் அல்லது தாம்பாளத்தில் ஊற்றி, எசென்ஸ் சேர்க்கவும்.
துணி / பால் கவரில் சிறிய துளையிட்டு மாவு நிரப்பி, சூடான எண்ணெயில் ஜாங்கிரியாக பிழிந்தெடுத்து, ரெடியாக இருக்கும் சர்க்கரைப் பாகில் சேர்த்து, 10 நிமிடம் ஊறிய பின் எடுத்துவிடவும். சீவிய முந்திரி கொண்டு அலங்கரிக்கவும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *