
இந்நிலையில் விஜய்-அட்லி இணையும் படத்திற்கு இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள ஜி.வி.பிரகாஷ், விஜய்க்காக ஒரு தரலோக்கல் பாடலை கம்போஸ் செய்யவுள்ளார். இந்த பாடலை தேவா பாடினால் நன்றாக இருக்கும் என கருதிய அவர், தேவாவை தொடர்பு கொண்டு கேட்டபோது, அவரும் மனமுவந்து ஒப்புக்கொண்டுள்ளார். விரைவில் இந்த பாடல் ஒலிப்பதிவு செய்யப்படவுள்ளது.
ஜி.வி.பிரகாஷ் இசையில் தேவாவின் கானா குரலில் விஜய் டான்ஸ் ஆடவுள்ள பாடல் கண்டிப்பாக சூப்பர் ஹிட் ஆகும் என தான் எதிர்பார்ப்பதாக ஜி.வி. பிரகாஷ் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் விஜய்யுடன் சமந்தா மற்றும் எமி ஜாக்சன் நடிக்கவுள்ளனர்.
English Summary : Thenisai Thendral Deva will be singing for Vijay composed by G.V.Prakash.
