சென்னை எழும்பூர் – விழுப்புரம் மார்க்கத்தில், தாம்பரம் யார்டில் பொறியியல் பணி காரணமாக, சென்னை கடற்கரை – தாம்பரத்துக்கு இயக்கப்படும் மின்சார ரயில் ரத்து செய்யப்பட உள்ளது.

சென்னை கடற்கரை – தாம்பரத்துக்கு நவ.8, 9, 10, 13, 14, 15, 16, 17, 20, 21,22, 23, 24 ஆகிய தேதிகளில் இரவு 11.59 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் ரத்து செய்யப்பட உள்ளது.

தாம்பரம் – சென்னை கடற்கரைக்கு நவ.8, 9, 10, 13, 14, 15, 16,17, 20, 21, 22, 23, 24 ஆகிய தேதிகளில் இரவு 11.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் ரத்து செய்யப்பட உள்ளது.

சென்னை கடற்கரை – தாம்பரத்துக்கு நவ.19-ம் தேதி இரவு 11.55 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், தாம்பரம் – சென்னை கடற்கரைக்கு அதே நாளில் இரவு 11.35 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் ஆகிய 2 ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன என சென்னை ரயில்வே கோட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *