கொச்சுவேலி, கோவை, மற்றும் மதுரை ஆகிய நகரங்களில் இருந்து மும்பையில் உள்ள லோக்மான்யா திலக் முனையம் வரை செல்லும் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட செய்தி ஒன்று கூறுவதாவது:

ரயில் எண் 22113, 22114: லோக்மான்யா திலக் முனையம் – கொச்சுவேலி – லோக்மான்யா திலக் முனையத்துக்கு வாரம் இரு முறை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதல் ஏ.சி. பெட்டிகள் வருகிற ஜூன் 20ஆம் தேதி முதல் இணைக்கப்படும்

ரயில் எண் 11013, 11014: லோக்மான்யா திலக் முனையம் – கோவை – லோக்மான்யா திலக் முனையம் இடையே செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒரு பொதுப் பிரிவு இரண்டாம் வகுப்பு பெட்டி ஜூலை 1ஆம் தேதி முதல் இணைக்கப்படும்.

ரயில் எண் 11043, 11044: லோக்மான்யா திலக் முனையம் – மதுரை – லோக்மான்யா திலக் முனையம் இடையே செல்லும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் 2 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகளும் ஒரு பொதுப் பிரிவு இரண்டாம் வகுப்பு பெட்டியும் ஜூலை 3ஆம் தேதி முதல் இணைக்கப்படும்.

இந்த கூடுதல் பெட்டிகள் இணைப்பால் இந்த ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் கூடுதல் பயன் பெறுவர் என்று அந்த செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.

English Summary : Extra compartments for Train No. 22113 and 22114 Lokmanya tilak train from Mumbai.