சென்னை கடற்கரை–தாம்பரம் இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் சில மின்சார ரெயில் சேவைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:–

பராமரிப்பு பணி காரணமாக வருகிற 28–ந்தேதி (சனிக்கிழமை) தாம்பரத்தில் இருந்து காலை 11.56., பிற்பகல் 12.08., 12.47., 1.17., 1.32., 2.02., 2.15., 2.25. மணிக்கு புறப்படும் மின்சார ரெயில்களும், செங்கல்பட்டில் இருந்து காலை 11.45., பிற்பகல் 12.15., 1.00., 1.50 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில்களும், திருமால்பூரில் இருந்து காலை 10.25 மணிக்கு புறப்படும் மின்சார ரெயிலும் சென்னை பூங்கா அல்லது எழும்பூர் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்படும் சென்னை கடற்கரைக்கு செல்லாது.

அதேபோல், வருகிற 28–ந்தேதி சென்னை கடற்கரையில் இருந்து பிற்பகல் 12.43., 12.56., 1.09., 1.22., 1.35., 1.47., 2.01., 2.13., 2.23., 2.32., 2.47., 3.02., 3.15 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில்கள் சென்னை பூங்கா அல்லது எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.

இதேபோல், தாம்பரம், செங்கல்பட்டு, திருமால்பூர் அடுத்த மாதம் 1–ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தாம்பரத்தில் இருந்து காலை 11.50., பிற்பகல் 12.00., 12.10., 12.40., 12.50., 1.15., 1.30., 2.00., 2.15 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில்களும், செங்கல்பட்டில் இருந்து காலை 11.45., பிற்பகல் 12.15., 1.00., 1.50 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில்களும், திருமால்பூரில் இருந்து காலை 10.25 மணிக்கு புறப்படும் மின்சார ரெயிலும் சென்னை பூங்கா அல்லது எழும்பூர் ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்படும்.

மறுமார்க்கமாக, அடுத்த மாதம் 1–ந்தேதி சென்னை கடற்கரையில் இருந்து பிற்பகல் 12.40., 12.50., 1.00., 1.15., 1.30., 1.45., 2.00., 2.15., 2.30., 2.45., 3.00., 3.15., 3.30 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில்கள் சென்னை பூங்கா அல்லது எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.

English Summary: Due to Maintenance Work, Tambaram, Chengalpattu and Thirumalpur train timings can be rescheduled on Feb.28th and Mar.1st.