ஃபிளை டார்ட் ஸ்டுடியோஸ் (FLY DART STUDIOS) தயாரிப்பில் “அஞ்சி நடுங்கிட” எனும் புதிய திரைப்படம் தயாரிக்கப்படவுள்ளது . இன்று (07-02-23) சென்னை பிரசாத் லேபில் இனிதே பூஜையுடன் தொடங்கப்பட்டது .

கதை சுருக்கம்: தாய் ,தந்தை மேல் பாசமும், தன்னை சுற்றி இருப்பவர்களின் மேல் அன்பும் வைத்திருந்த இளைஞன் ஒருவன் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக தாய் தந்தையரை நயவஞ்சகமாக கொன்றவர்களை பழி வாங்கும் கதை . இது ஒரு வித்தியாசமான ஆக்க்ஷன் திரில்லர் படம் .

இப்படத்தில் புதுமுக கதாநாயகனாக மாறன் அறிமுகமாகிறார் .கதாநாயகியாக பழம்பெரும் நடிகர் ஜெஸ்டின் அவர்களின் பேத்தி ‘ஹரிஷா ஜெஸ்டின்’ இப்படத்தில் நடிக்கிறார் .மேலும் ஜெய் பாபு ,லோகேஷ், அதிரடி அரசு மற்றும் பபிதா ஜெஸ்டின் என முன்னணி நடிகர் நடிகைகள் நடிக்க உள்ளனர் .

இப்படத்தின் படப்பிடிப்பு கிருஷ்ணகிரி, ஓசூர், மைசூர் ,பெங்களூர் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடக்க உள்ளது.

தொழில்நுட்பக் கலைஞர்கள்:

கதை, திரைக்கதை, வசனம்- மாறன்

இயக்கம்- M. ஸ்ரீதர்

ஒளிப்பதிவு – A .T ஜாய்

இசை – டாக்டர் செல்லையா பாண்டியன்

பாடல்கள் – தொல்காப்பியன் ,மாறன்

எடிட்டிங் – லெனின் சந்திரசேகர்

நடனம் – பவர் சிவா

ஸ்டண்ட் – காட்டு ராஜா

கலை – ராமலிங்கம்

மக்கள் தொடர்பு – செல்வரகு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *