thani-oruvan-1ஜெயம் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்தசாமி ஆகியோர் நடிப்பில் கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன ‘தனி ஒருவன்’ திரைப்படம் ஊடகங்கள் மற்றும் திரையுலகினர்களின் பாராட்டை பெற்று வெற்றிகரமாக 100வது நாளை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது. இந்நிலையில் இந்த படத்தின் வசூல் ரூ.75 கோடியை தாண்டியுள்ளதாகவும், விரைவில் ரூ.100 கோடியை நெருங்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த படத்தை திரையுலகினர்கள் மட்டுமின்றி அனைத்து துறையினர்களும் பாராட்டி வருவதாக கூறப்படும் நிலையில் பிரபல தொழிலதிபரும் HCL நிறுவனத்தின் உரிமையாளருமான ஷிவ் நாடார் மற்றும் HCL உயரதிகாரிகளுக்கு சமீபத்தில் ‘தனி ஒருவன்’ திரைப்படத்தின் சிறப்பு காட்சி சமீபத்தில் திரையிடப்பட்டது.

இந்த திரைப்படத்தை பார்த்த ஷிவநாடார், ஜெயம் ரவி, ஜெயம் ராஜா மற்றும் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு, தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
English summary – Shiv Nadar, founder chairman of HCL Technologies wishes the film Thani Oruvan