உலக செவித்திறன் தினத்தையொட்டி சென்னை கஸ்தூர்பா காந்தி தாய் சேய் நல மருத்துவமனையில் நடைபெற்ற முகாமில் 300-க்கும் மேற்பட்டோருக்கு இலவச மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் 25 பேருக்கு இலவச காதுகேள் கருவிகள் வழங்கப்பட்டன.
மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டை பிரிவும், பேச்சியல் – செவித்திறன் பிரிவும் இணைந்து முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இந்த இலவச பரிசோதனைகளை மேற்கொண்டது.
கடந்த ஒரு வாரமாக நடைபெற்ற செவித்திறன் முகாமில் சிறப்பு மருத்துவர்களும் முதுநிலை மருத்துவ மாணவர்களும் பங்கேற்று நோயாளிகளை பரிசோதித்தனர். இதன் மூலம் 300-க்கும் அதிகமானோர் பயனடைந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.