வேலூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் வியாழக்கிழமை (மார்ச் 14) வழக்கத்தை விட 2 முதல் 4 டிகிரி வரை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியது: கோடைகாலத்தின் தொடக்கத்தையொட்டி, வேலூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், கரூர், திண்டுக்கல் ஆகிய 10 மாவட்டங்களில் வியாழக்கிழமை (மார்ச் 14) வழக்கத்தை விட 2 முதல் 4 டிகிரி வரை வெயில் அதிகரித்து காணப்படும்.

தமிழ்நாடு, புதுச்சேரியின் ஒருசில பகுதிகளில் சனிக்கிழமை (மார்ச் 16) வரை வறண்ட வானிலை நிலவும். தென் தமிழக கடலோரப் பகுதி, புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 17) இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையைப் பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

4 இடங்களில் வெயில் சதம்: அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை, சேலத்தில் தலா 101 டிகிரியும், தருமபுரி, திருத்தணியில் தலா 100 டிகிரியும் புதன்கிழமை வெயில் பதிவானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *