சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த குருசிஷ்யன்’ படத்தில் அறிமுகமான நடிகை கவுதமி அதன்பின்னர் ரஜினிகாந்த் நடித்த தர்மதுரை, கமல்ஹாசன் நடித்த அபூர்வ சகோதரர்கள், நம்மவர், குருதிப்புனல், தேவர் மகன் உள்பட பல படங்களில் நடித்தார். இதன்பின்னர் நீண்ட இடைவெளிக்கு பின்னர் தற்போது கமல்ஹாசனுடன் இணைந்து நடித்த ‘பாபநாசம்’ திரைப்படம் தற்போது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

பாபநாசம் படத்தில், ஒரிஜினல் மலையாள படமான த்ரிஷ்யம் படத்தில் மீனாவின் கேரக்டரில் மிக அற்புதமாக கவுதமி நடித்திருந்தார். நடிகை மீனாவே கவுதமியின் நடிப்பை மனதார புகழ்ந்திருந்தார். மேலும் பல கோலிவுட் நட்சத்திரங்களும், ரசிகர்களும் கவுதமியின் நடிப்பை ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் பாராட்டு தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் தன்னுடைய நடிப்பை பாராட்டியவர்களுக்கு நன்றி கூறுவதற்காக இன்று முதல் கவுதமி டுவிட்டரில் இணைந்துள்ளார். மேலும் இன்று மாலை 5 மணிக்கு ரசிகர்களின் கேள்விகளுக்கு அவர் டுவிட்டரில் பதில் கூறவும் உள்ளார். கவுதமியிடம் கேள்வி கேட்க விரும்புபவர்கள் @gautami_tads என்ற டுவிட்டர் பக்கத்திலும் #askgautami என்ற டுவிட்டர் பக்கத்திற்கு சென்று தங்கள் கேள்விகளை கேட்கலாம்.

English Summary : Gautami fans can now talk with her today evening at 5pm in twitter through “@gautami_tads” or “#askgautami”.