சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 512 ரூபாய் உயர்ந்து ரூ. 25,688-க்கும், வெள்ளி விலை கிராமுக்கு 60 காசுகள் உயர்ந்து 40.90 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தையில் சில தினங்களாக தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் நிலவி வருகிறது. இதனால், உள்ளூரிலும் தங்கத்தின் விலை மாறுபடுகிறது. முன்னதாக கடந்த ஜனவரி மாதம் வரலாற்றிலேயே முதல்முறையாக ஒரு சவரன் தங்கம் விலை ரூ. 25 ஆயிரத்தை தாண்டி விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் சென்னையில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ. 25 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
சென்னையில் நேற்று மாலை 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ. 25,176–க்கு விற்கப்பட்டது. இந்நிலையில், இன்று ஒரே நாளில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 512 ரூபாய் உயர்ந்துள்ளது.