மணிக்கு, 200 கி.மீ., வேகத்தில் செல்லக் கூடிய அதிவேக ரயில்களில் பொருத்தும் வகையிலான நவீன ரயில் பெட்டிகளை பொருத்த ரயில்வே அமைச்சகம் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நவீன ரயில் பெட்டிகளை சென்னை பெரம்பூரில் உள்ள ரயில்பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு முன், அதற்கான மாதிரி ரயில் பெட்டிகள் உருவாக்கப்படும். இதுகுறித்த அறிவிப்பு, இம்மாத இறுதியில் தாக்கல் செய்யப்படவுள்ள ரயில்வே பட்ஜெட்டில் வெளியாகும் என்று ரயில்வே அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
English Summary: High Speed Train box construct in chennai.