இளையதளபதி விஜய் நடித்த ‘புலி’ திரைப்படம் நாளை உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸாகவுள்ள நிலையில் இன்று காலை முதல் விஜய் உள்பட ‘புலி’ படத்தின் குழுவினர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

விஜய், ‘புலி’ பட தயாரிப்பாளர்கள், புலி படத்தின் விநியோகிஸ்தர்கள், விஜய்யின் அடுத்த படத்தை தயாரித்து வரும் கலைப்புலி எஸ்.தாணு, மற்றும் நடிகைகள் நயன்தாரா, சமந்தா ஆகியோர்கள் வீடுகள் அலுவலகங்கள் உள்பட மொத்தம் 32 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

‘புலி’ படத்திற்கு இன்னும் தமிழக அரசின் வரிவிலக்கு கிடைக்காத நிலையில், ரிலீஸுக்கு முந்தைய தினம் வருமான வரித்துறையினர் திடீரென சோதனை நடத்துவது கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English Summary : Income tax ride in Puli film crew