இந்தியாவின் அதிநவீன ஏவுகணையான அக்னி 5 வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது என்று இந்திய பாதுகாப்புதுறையின் ஆராய்ச்சி கழகம் தெரிவித்துள்ளது. முதல்முறையாக இந்த சோதனை மிக எளிதில் ஏவக்கூடிய இடத்தில இருந்து ஏவப்பட்டது. அக்னி 5 ஏவுகணை 50டன் எடை, 17 நீளம் கொண்டது. இந்த சோதனையின் மூலம் அக்னி 5 ஏவுகணையை சாலையில் இருந்தும் ஏவலாம். அக்னி 5 ஏவுகணை 5000 கிலோமீட்டர் தூரம் உள்ள தனது இலக்கை தாக்கி அழிக்கவல்லது. இதே போன்று ஏவுகணை சீனா மற்றும் ஐரோப்பா நாடுகள் சோதனை செய்துள்ளன.

English Summary: India’s Agni 5 launches successfully.