anushka-211116ஆர்யா, அனுஷ்கா நடிப்பில் பிவிபி நிறுவனம் தயாரித்துள்ள இஞ்சி இடுப்பழகி’ என்ற திரைப்படம் தெலுங்கில் ‘சைஸ் ஜீரோ’ என்ற பெயரில் வெளியாகவுள்ளது. இந்த படம் வரும் 27ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் நேற்று இந்த படம் தணிக்கை அதிகாரிகளால் தணிக்கை செய்யப்பட்டது. தணிக்கை அதிகாரிகள் இந்த படத்திற்கு U/A சான்றிதழ் கொடுத்துள்ளனர். இந்த படத்தின் தணிக்கை முடிந்துவிட்டதால் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக இன்று அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.

இந்த படத்தில் ஆர்யா, அனுஷ்கா ஆகியோர்களோடு நாகார்ஜூனா, ஜீவா, பாபிசிம்ஹா, ராணா, தமன்னா, காஜல் அகர்வால், ஹன்சிகா மற்றும் ரேவதி ஆகியோர் சிறப்பு தோற்றங்களில் நடித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் ஒரு கேரக்டருக்காக அனுஷ்கா உடல் எடையை அதிகரித்து நடித்துள்ளார். பிரகாஷ் இயக்கியுள்ள இந்த படத்திற்கு பாகுபலி இசையமைப்பாளர் எம்.எம்.கீரவானி இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

27ஆம் தேதி ரிலீஸ் ஆகும் ‘இஞ்சி இடுப்பழகி’ தணிக்கை செய்யப்பட்ட நிலையில் அதே நாளில் ரிலீஸ் ஆகவுள்ள மற்றொரு படமான ‘144’ என்ற படமும் நேற்று தணிக்கை செய்யப்பட்டது. அசோக்செல்வன், மிர்ச்சி சிவா, ஓவியா, ஸ்ருதிராமகிருஷ்ணன் உள்பட பலர் நடித்துள்ள ‘144’ படத்திற்கு தணிக்கை அதிகாரிகள் ‘U’ சர்டிபிகேட் கொடுத்துள்ளனர். இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த படம் ‘U’ சர்டிபிகேட் பெற்றுள்ளதால் தமிழக அரசின் வரிவிலக்கு இந்த படத்திற்கு கிடைக்க வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

144 இந்த படத்தை பல வெற்றி படங்களை தயாரித்த சி.வி.குமரன் தனது திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார். மணிகண்டன் இயக்கியுள்ள இந்த படத்தை சீன் ரோல்டான் ( Sean Roldan ) என்பவர் இசையமைத்துள்ளார். இவர் ஏற்கனவே ‘வாயை மூடி பேசவும்’ என்ற படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
English summary-The Censor Board members after viewing the film Inji idupalagi certified it with a U certificate.