சென்னையில் நாளை ‘இன்னிசை வார்ப்புகள் 2015′ என்னும் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இசை பிரியர்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சிக்கு தவறாது கலந்து கொள்ளுமாரு இந்த இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ள “காமா மீடியா ஈவென்ட்ஸ்’ நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள மியூசிக் அகாதெமியில் மாலை 6 மணிக்கு ஆரம்பமாகும் இந்த இசை நிகழ்ச்சியில் பிரபல திரைப்பட பின்னணிப் பாடகர்கள் முகமது அஸ்லாம், கல்பனா, முகேஷ், சுர்முகி ஆகியோர் பழைய மற்றும் புதிய திரைப்பட பாடல்களை பாடவுள்ளனர்.

1950-ஆம் ஆண்டு முதல் 2015-ஆம் ஆண்டு வரையிலான பிரபல திரைப்படப் பாடல்கள் இடம்பெறும் இந்த நிகழ்ச்சியை பிரபல வர்ணனையாளர் பி.ஹெச்.அப்துல் ஹமீது தொகுத்து வழங்க உள்ளார்.

மேலும் திரைத் துறையைச் சேர்ந்த ஏராளமான பிரபலங்களும் இந்த இசை நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான டிக்கெட்டுகளை www.bookmyshow.com, www.ticketnew.com, www.eventjini.com ஆகிய இணையதளங்களில் புக் செய்யலாம். அல்லது 9884700022 , 9840153443 என்ற எண்களை தொடர்பு கொண்டு டிக்கெட்டுக்களை ரிசர்வ் செய்து கொள்ளலாம்.

English Summary : Gamma Media Events conducts a “Innisai Vaarpugal 2015” concert tomorrow in chennai.