டெல்லிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

11வது ஐபிஎல் தொடரின் ஆறாவது போட்டி ராஜஸ்தான், டெல்லி அணிகளுக்கு இடையே ஜெய்ப்பூரில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ரகானேவும், ஷார்ட்டும் களமிறங்கினர். ஸ்கோர் 11 என்றிருந்த போது, ஷார்ட் 6 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

அடுத்து களம் இறங்கிய பென் ஸ்டோக்ஸ் 16 ரன்களிலும், சஞ்சு சாம்சன் 37 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதேபோல், ரகானே 45 ரன்களிலும், பட்லர் 29 ரன்களிலும் ஆட்டமிழந்தார். 17.5 ஓவரில் 153 ரன்கள் எடுத்திருந்தபோது மழை பெய்ய தொடங்கியதால், ஆட்டம் தடைப்பட்டது.

நீண்ட நேரமாக மழை விட்டு விட்டு பெய்ததால், ஆட்டம் மீண்டும் தொடங்குவதில் தாமதமானது. ஒரு கட்டத்தில், மழை நின்றதும், ஆட்டம் தொடங்கியது. டக்வொர்த் லூயிஸ் முறைப்படி டெல்லி அணி வெற்றி பெற 6 ஓவரில் 71 ரன் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

தொடர்ந்து ஆடிய டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 6 ஓவரில் 4 விக்கெட்களை இழந்து 60 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. ரிஷப் பண்ட் 20 ரன்களும், மேக்ஸ்வெல், மோரிஸ் தலா 17 ரன்களும் எடுத்திருந்தனர். விஜய் ஷங்கர் 3 ரன்கள் எடுத்திருந்தார்.


English Summary: IPL-Rajasthan Royals defeat Delhidevils.