சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘பெண்களுக்கு 24 மணி நேரமும் உடனடி மற்றும் அவசர சேவைகள் வழங்கும் நோக்கத்துடன் ‘பெண்கள் உதவி மையம்’ அமைக்கும் வகையில் ஒரு புதிய திட்டத்தை பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் ஆரம்பித்துள்ளது. இந்த திட்டத்தில் பணிபுரிய காலி பணியிடங்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மைய நிர்வாகி, மூத்த ஆலோசகர், வழக்கு அலுவலர்கள், பன்முக உதவியாளர், பாதுகாப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு தகுதி மற்றும் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பணியிடங்களுக்கு ஏற்ப மாதம் ரூ.6 ஆயிரத்து 400 முதல் ரூ.30 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும்.

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://chennai.nic.in// என்ற இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, அதைப் பூர்த்தி செய்து வரும் 30-ம் தேதி மாலை 5 மணிக்குள், மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், 8-வது தளம், சிங்காரவேலன் மாளிகை, ராஜாஜி சாலை, சென்னை-600001 என்ற முகவரியில் நேரடியாகவோ அல்லது chndswo.4568@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பலாம்’ என்று கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *