கடந்த 1998 முதல் 2007 வரை கோலிவுட்டில் பிரபலமாக இருந்த நடிகையும் நடிகர் சூர்யாவின் மனைவியுமான ஜோதிகா எட்டு வருட இடைவெளிக்கு பின்னர் ரீ எண்ட்ரி ஆகியுள்ள திரைப்படம் ’36 வயதினிலே. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள லீலா பேலஸ் ஓட்டலில் இன்று காலை 10 மணிக்கு ’36 வயதினிலே’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா மிகச்சிறப்பாக நடைபெற உள்ளது என படத்தின் தயாரிப்பாளர் சூர்யா அறிவித்துள்ளார். மேலும் இந்த படம் வரும் மே மாதம் தியேட்டர்களில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜோதிகா, ரகுமான், அபிராபி உள்பட பலர் நடித்திருக்கும் இந்த திரைப்படத்தை பிரபல மலையாள இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த திரைபடம் சூர்யாவின் 2D நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் இந்த படத்தின் தெலுங்கு மற்றும் இந்தி உரிமைகளும் சூர்யாவிடம் இருப்பதால் விரைவில் இந்த இரு மொழிகளிலும் இந்த படம் ரீமேக் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English Summary : Jothika’s “36 Vayathinile” Music launch will be conducted today morning 10.00 am. at Leela palace.