நமது கலைஞர் தொலைக்காட்சியில் தமிழர் திருநாளாம் பொங்கல் மற்றும் மாட்டு பொங்கல் தினங்களில் புத்தம் புதிய திரைப்படங்கள் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக இருக்கிறது.

ஜனவரி 15, தமிழ் புத்தாண்டு பொங்கல் தினமான தை முதல் நாளன்று, காலை 9 மணிக்கு திண்டுக்கல் ஐ.லியோனி தலைமையில் கலகலப்பான சிறப்பு பட்டிமன்றமும், காலை 10 மணிக்கு அருள்நிதி – துஷாரா விஜயன் – சந்தோஷ் பிரதாப் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றிநடை போட்ட “கழுவேத்தி மூர்க்கன்” சிறப்பு திரைப்படமும், பிற்பகல் 1.30 மணிக்கு அஜித் குமார் – மஞ்சு வாரியர் நடிப்பில் “துணிவு” சிறப்பு திரைப்படமும், மாலை 6 மணிக்கு தமிழ் திரையுலகம் மொத்தமாக ஒன்றுதிரண்ட “கலைஞர் நூற்றாண்டு விழா” கொண்டாட்டத்தின் முதல் பகுதியும் ஒளிபரப்பாக இருக்கிறது.

ஜனவரி 16, திருவள்ளுவர் தினம் மற்றும் மாட்டுப்பொங்கல் தினத்தன்று, காலை 10:00 மணிக்கு ஜெயம் ரவி – நயன்தாரா நடிப்பில் உருவாகியிருக்கும் “இறைவன்” விறுவிறுப்பான சூப்பர்ஹிட் திரைப்படமும், பிற்பகல் 1.30 மணிக்கு பிரதீப் ரங்கநாதன் – இவானா நடிப்பில் “லவ் டுடே” சிறப்பு திரைப்படமும், மாலை 6:00 மணிக்கு “கலைஞர் நூற்றாண்டு விழா” கொண்டாட்டத்தின் இரண்டாவது பகுதியும் ஒளிபரப்பாக இருக்கிறது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *