ஜெயா தொலைக்காட்சியில் வரும் ஜனவரி 15 ஆம் தேதி தை பொங்கல் திருநாளை முன்னிட்டு “சிறப்பு பட்டிமன்றம் “ ஒளிபரப்பாகிறது.”பிள்ளைகளை வளர்ப்பதில் பெரும் பங்கு வகிப்பவர்கள் பெற்றோர்களா? ஆசிரியர்களா?” ,என்ற தலைப்பில், சொல்லின் செல்வர் திரு. மணிகண்டன் தலைமையில் பிரபல பேச்சாளர்கள் இலக்கிய இளவல் திரு. தாமல் சரவணன், திருமதி. நித்யப்ரியா, இன்சொல் இளவல் திரு. காளிதாஸ் ஆகியோர்கள் பெற்றோர்களே..! என வாதாடுகிறார் மற்றும் நயவுரை நம்பி திரு. நாராயண கோவிந்தன், நகைச்சுவை அரசி திருமதி. அன்னலட்சுமி, இசைக்கலைமணி இராஜபாளையம் உமாசங்கர் ஆகியவர்கள் ஆசிரியர்களே..! என வாதாடி தன் பேச்சால் சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் “சிறப்பு பட்டிமன்றம்” வரும் திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு …உங்கள் ஜெயா தொலைக்காட்சியில் ,ஒளிபரப்பாகிறது.

”நம்ம ஊரு பொங்கல்”

நம்ம ஊரு பொங்கல்ஜெயா டிவியில் பொங்கலன்று காலை 11:30மணிக்கு ” நம்ம ஊரு பொங்கல் ” நிகழ்ச்சிஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிரபல சமையல் கலை வல்லுநர்கள்செஃப்.தீனா மற்றும் செஃப்.வித்யா பங்குபெறுகிறார்கள்.இந்த நிகழ்ச்சியில் ஜெயா டிவி தொகுப்பாளர்கள் மூன்றுகுழுக்களாக கலந்து கொண்டு பொங்கலன்றேஅவர்களுக்கு நேரடியாக சென்று நெல்வயலில்விவசாயிகளோடு சென்று அறுவடை செய்து புத்தரிசிகொண்டு வருகிறார்கள், இன்னொரு குழுவினர்கரும்பிலிருந்து வெல்லம் தயாரித்து கொண்டுவருகிறார்கள், மற்றொரு குழுவினர் பானை செய்யும்கலைஞர்களுடன் சேர்ந்து புதுப்பானை செய்து கொண்டுவருகிறார்கள்…

இவர்கள் கொண்டுவரும் பொருட்களைவைத்து பொங்கலன்று பிரபல சமையல் கலைவல்லுநர்கள் செஃப்.தீனா மற்றும் செஃப்.வித்யா பொங்கல்செய்து காண்பித்து பொங்கல் கொண்டாடுகின்றனர்…. வழக்கமான பொங்கலாக இல்லாமல் களத்திற்குநேரடியாக சென்று வந்து பொங்கலுக்கு தேவையானபொருட்களை சேகரித்து பொங்கல்வைத்து பொங்கல்விழா கொண்டாடுவது முற்றிலும் வித்தியாசமானநிகழ்ச்சியாக அமைந்துள்ளது இந்த “ நம்ம ஊருபொங்கல் “ நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

‘ஜமாய் பொங்கல்’

ஜெயா டிவி யில் வரும் ஜனவரி 16 ஆம் தேதி மாட்டு பொங்களை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சி“ஜமாய் பொங்கல்”

ஜெயா தொலைக்காட்சியில் மாட்டு பொங்களை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சியில் கனிகா பரமேஸ்வரி கல்லூரியில் நடக்கவிருக்கும் பொங்கல் நிகழ்ச்சியில் ஜோ பட கதாநாயகன் ரியோ ராஜ் மற்றும் பவ்யா, அக்கல்லூரி மனைவியருடன் பொங்கல்களை கொண்டாடவிருக்கின்றனர். இதில் ஹரிதர்ஷன் மற்றும் இளவேனில் கலகலப்பாக தொகுத்து வழங்குகின்றனர்

ஜெயா டிவி யில் வரும் செவ்வாய் கிழமை மாட்டு பொங்கல் அன்று மாலை 05.00 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *