ருத்ராவின் மகள் யார்? அனிதாவா? சக்தியா?

அபிராமி பாட்டிக்கு வரும் சந்தேகம்..!

கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் மெகாத்தொடர் “கண்ணெதிரே தோன்றினாள்”.

சக்தியாக சுவேதாவும், ருத்ராவாக மாளவிகா அவினாஷூம் நடிக்கும் இந்த தொடருக்கு குடும்பங்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், தொடரில் குலதெய்வ கோயிலுக்கு சென்று வந்த பிறகு, அபிராமியாக முக்கிய கதாபாத்திரத்தில் வடிவுக்கரசி அறிமுகமாக தொடரில் அனல் பறக்கிறது.

தனது பாட்டியான அபிராமியிடம் அனிதா, தனக்கு சக்தி தான் எதிரி எனவும், அவளை பழிவாங்க வேண்டும் என்றும் அனிதா கூற, சக்தியை தான் பார்த்துக் கொள்வதாக அபிராமி பாட்டி கூறுகிறார். மேலும் ருத்ராவை பழிவாங்க தான் வந்திருப்பதாகவும், ருத்ராவை கொல்ல உதவி செய்தால் பணம் தருவதாக சக்தியை தன் வலையில் விழவைக்க முயற்சி செய்கிறார்.

ஆனால் பிறகு சக்தியின் நல்ல குணம் அபிராமி பாட்டிக்கு தெரிய வர, மறுபுறம் சக்தி, அனிதா பிறப்பிலும் அபிராமி பாட்டிக்கு சந்தேகம் வருகிறது. இதனால் அனிதாவை ரத்னம் வீட்டில் தங்க சொல்ல அனிதா ரத்னம் வீட்டுக்கு செல்வாளா? ருத்ராவின் மகள் யார்? என்பதை அபிராமி பாட்டி கண்டுபிடிப்பாரா? என்கிற எதிர்பார்ப்போடும் தொடர் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *