கோயம்பேடு பழச்சந்தைக்கு கோடைக்கால பழங்களின் வரத்து அதிகரித்துள்ளது.

கோயம்பேடு சந்தைக்கு, பல்வேறு மாநிலங்களில் இருந்து மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும், பலவகை பழங்கள் கொண்டு வரப்படுகின்றன. கோடை வெயில் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பழங்கள், பழரசம் உள்ளிட்டவற்றை, பொதுமக்கள் அதிகளவில் வாங்கி செல்கின்றனர்.

ஆந்திரத்திலிருந்து தினமும் 10-க்கும் மேற்பட்ட மினி லாரிகளில் சாத்துக்குடி பழங்கள் வருகின்றன. மஹாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து ஐந்துக்கும் மேற்பட்ட லாரிகளில், ஆரஞ்சு பழங்களின் வரத்து உள்ளது. திராட்சை, மாதுளை உள்ளிட்ட பழங்களும் 10க்கும் மேற்பட்ட லாரிகளில் வருகிறது. கோடைக்கால சிறப்பு பழங்களான தர்ப்பூசணி, கிர்ணி உள்ளிட்ட பழங்களும், பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமின்றி ஆந்திராவில் இருந்தும் 15க்கும் மேற்பட்ட லாரிகளில் வருகிறது.

மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ;

  • சாத்துக்குடி ரூ.40 முதல் ரூ.60 வரையிலும்,
  • ஆரஞ்ச் ரூ.60 முதல் ரூ.100 வரையிலும்,
  • திராட்சை ரூ.40 முதல் ரூ.50 வரையிலும்,
  • தர்ப்பூசணி ரூ.15 முதல் ரூ.20 வரையிலும்,
  • கிர்ணி ரூ.20 முதல் ரூ.25 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. மாதுளை விளைச்சல் குறைவாக இருப்பதால், கிலோ 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *