ராயபுரம் மற்றும் சென்னை கடற்கரை யார்டில் பராமரிப்பு பணி நடப்பதால், மார்ச் 30-ஆம் தேதிவரை ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மார்ச் 28 முதல் மார்ச் 30-ஆம் தேதி வரை ரயில் சேவையில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள்: கும்மிடிப்பூண்டி-சென்னை கடற்கரைக்கு இரவு 9.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், வண்ணாரப்பேட்டை- சென்னை கடற்கரை இடையேயான பகுதி ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் மூர் மார்க்கெட் வளாக நிலையத்துக்கு திருப்பிவிடப்படும்.

சென்னை கடற்கரை-அரக்கோணத்துக்கு அதிகாலை 1.20 மணிக்கு புறப்பட வேண்டிய மின்சார ரயில் திருப்பி விடப்பட்டு, 5 நிமிஷம் தாமதமாக மூர்மார்க்கெட் வளாகத்தில் இருந்து புறப்பட்டுச் செல்லும்.

அரக்கோணம்-வேளச்சேரிக்கு அதிகாலை 4 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டு வேளச்சேரிக்கு பதிலாக மூர்மார்க்கெட் வளாகத்துக்கு வந்தடையும்.

ஆவடி-வேளச்சேரிக்கு காலை 8.15 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் திருப்பிவிடப்பட்டு, வேளச்சேரிக்கு பதிலாக மூர்மார்க்கெட் வளாக ரயில் நிலையத்தை வந்தடையும்.

பட்டாபிராம் ராணுவ பகுதி – வேளச்சேரிக்கு காலை 8.45 புறப்படும் மின்சார ரயில் திருப்பிவிடப்பட்டு, மூர் மார்க்கெட் வளாகத்தை அடையும்.

திருவள்ளூர்-வேளச்சேரிக்கு காலை 8.50, மாலை 5.55 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் திருப்பிவிடப்பட்டு, வேளச்சேரிக்கு பதிலாக மூர்மார்க்கெட் வளாகத்தை வந்தடையும்.

அரக்கோணம்-வேளச்சேரிக்கு மாலை 4.15 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் திருப்பிவிடப்பட்டு, வேளச்சேரிக்கு பதிலாக மூர் மார்க்கெட் வளாகத்தை வந்தடையும்.

சூலூர்பேட்டை- வேளச்சேரிக்கு காலை 7.25 மணிக்கு இயக்கப் படும் மின்சார ரயில் திருப்பி விடப்பட்டு வேளச்சேரிக்குப் பதிலாக மூர் மார்க்கெட் வளாகத்தை அடையும்.

கும்மிடிப்பூண்டி-வேளச்சேரிக்கு காலை 8.50 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் திருப்பிவிடப்பட்டு, வேளச்சேரிக்கு பதிலாக மூர்மார்க்கெட் வளாகத்தை அடையும்.

கும்மிடிப்பூண்டி- சென்னை கடற்கரைக்கு இரவு 9.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் திருப்பிவிடப்பட்டு வேளச்சேரிக்கு பதிலாக மூர்மார்க்கெட் வளாகத்தை வந்தடையும்.

ரத்து செய்யப்படும் ரயில்கள்: ஆவடி-வேளச்சேரிக்கு அதிகாலை 4.10, 6.05, 7.10, 8.45, பகல் 12.10, பிற்பகல் 2.40, மாலை 4.20, 4.40, 5.50 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.

ஆவடி-திருவள்ளூருக்கு அதிகாலை 4.25 இயக்கப்படும் மின்சார ரயில் ரத்து செய்யப்படுகிறது.

திருவள்ளூர் – வேளச்சேரிக்கு முற்பகல் 11.05, மதியம் 1.40 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில் ரத்து செய்யப்படுகிறது. வேளச்சேரி -ஆவடிக்கு இரவு 8.25, 8.30, 9.50, இரவு 10.30 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில் ரத்து செய்யப்படுகின்றன. இந்தத் தகவல் தெற்கு ரயில்வே செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *