சிறப்பம்சங்கள்:

  • ஹுரக்கன் ஈ.வி.ஓ ரியர்-வீல் டிரைவ் வாகனம், ஓட்டுபவர்களின் வசதிக்கு ஏதுவானது.
  • 610hp (449 kW) பவர், 6,500 rpm-ல் 560 Nm டார்க் எனப்படும் திருகுவிசையுடன் பர்ஃபாமென்ஸ் டிராக்‌ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் கொண்டது.
  • தனித்துவமான டிசைன், இந்த வாகனத்தில் சிறப்பம்சம்.
  • உட்பகுதியில் உள்ள காக்பிட்டில், எச்.எம்.ஐ 8.4” டச்-ஸ்க்ரீன் பொருத்தப்பட்டுள்ளது.

பிரபல ஆட்டோமொபைல் நிறுவனமான லாம்போர்கினி, புத்தம் புதிய ஹூரக்கன் ஈ.வி.ஓ ரியர்-வீல் டிரைவ் (RWD) வாகனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது அட்டகாசமாக ஓடக்கூடிய தொழில்நுட்பம் பொருத்தப்பட்டது, 8,000 rpm-ல் 610hp (449 kW) பவர், 6,500 rpm-ல் 560 Nm டார்க் எனப்படும் திருகுவிசை கொண்டது, எடை குறைவான இந்த காரில் ரியர்-வீல் டிரைவிங் உள்ளதால் பயணம் மிக எளிதாக அமையும். மேலும், காரின் எடை வெறும் 1,389 கிலோகிராம் மட்டுமே. 325km/h வேகத்தில் செல்ல கூடிய இந்த கார், வெறும் 3.3 நொடிகளில் 0 முதல் 100 km/h வேகம் எடுக்க கூடியது. நேர் வழி வேகம் அல்லது வளைவு வழி பாதைகளில் செல்லக்கூடிய வேகத்தை பொருட்படுத்தவில்லை. தனித்துவமான புதிய டிசைன், வசதியான ஓட்டம் ஆகியவை கொண்டதால் நிச்சயமாக வாகனம் ஓட்டுபவர்களுக்கு பிடித்த வாகனமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இது குறித்து பேசிய லாம்போர்கினி இந்திய தலைமை நிர்வாகி திரு. ஷரத் அகர்வால், “சர்வதேச அறிமுகத்துக்கு பிறகு லாம்போர்கினியின் ஹூரக்கன் ஈ.வி.ஓ ஆர்.டபிள்யு.டி வாகனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்வதில் மகழ்ச்சி கொள்கிறோம். ஓட்டுபவர்களின் வசதிக்கேற்ப, புத்தம் புதிய தொழில்நுட்பங்கள் பொருத்திய வாகனமாக அமைந்துள்ளது. நிச்சயமாக, இந்த வாகனத்தில் பயணம் செய்யும்போது வசதியான அனுபவத்தை உணர்வீர்கள். காரின் தன்மை அதற்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. ஓட்டுபவரின் கட்டுப்பாட்டில் இயங்கக்கூடிய இந்த வாகனம், ஓட்டுனர் – கார் இடையேயான உறவை புரிந்து கொண்டு செயலாற்றும் என்பது இந்த வாகனத்தின் சிறப்பு அம்சம். லாம்போர்கினியின் புகழ்பெற்ற ரியர்-வீல் டிரைவ் முறைப்படி உருவாகியுள்ளது இந்த ஹூரக்கன் வாகனம். உயர்தர தொழில்நுட்பங்களால் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த வாகனம் நிச்சயம் ஓட்டுபவர்களுக்கு மகிழ்ச்சி தரும்”.

மேலும், “லாம்போர்கினியின் ஹூரக்கன் ஈ.வி.ஓ ஆர்.டபிள்யு.டி. வி-10 ஹூரக்கன் மாடல்களின் வழியில் அமைந்துள்ளதால், இந்த பிராண்டு பிடித்தவர்களுக்கு பிரத்யேக அனுபவம் காத்திருக்கிறது” என்றார்.

ஓட்டுனர்களுக்காகவே வடிவமைக்கப்பட்டது

வி-10 இன்ஜின் பவர் சப்ளை செய்வது மட்டுமின்றி, ரியர் வீல் டிரைவ்களுக்கு மிகவும் ஏதுவானது. உலர்ந்த, ஈரமான அல்லது பனி காலங்களிலும் சீராக ஓட்டுவதற்கான கட்டுப்பாடுகளை இந்த வாகனத்தில் அமைக்கப்பட்டுள்ளது. புதிய (P-TCS) எனப்படும் பர்ஃபாமென்ஸ் டிராக்‌ஷன் கண்ட்ரோல் சிஸ்டம், ஹூரக்கன் ஈ.வி.ஓ ஆர்.டபிள்யு.டி வாகனத்துக்கென பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ளது. இதனால், சறுக்கல் அல்லது வழுக்கல் ஏற்பட்டாலும் வாகனத்தின் வேகத்தை சீராக வைத்திருக்கும்.

சாதாரண டிராக்‌ஷன் கண்ட்ரோல் சிஸ்டத்தில், வாகனத்தின் தன்மை சீரானவுடன் மீண்டும் வேகத்தை எழுப்பும். ஆனால், பர்ஃபாமென்ஸ் டிராக்‌ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் முன்கூட்டிய காரின் வேகத்தை சீராக்கும். இதனால், தேவையில்லாத விபத்துகளை தவிர்க்கலாம்.

ஹூரக்கன் ஈ.வி.ஓ ஆர்.டபிள்யு.டி வாகங்களுக்காகவே பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த பர்ஃபாமென்ஸ் டிராக்‌ஷன் கண்ட்ரோல் சிஸ்டம், ANIMA பட்டன் (அடாப்டீவ் நெட்வொர்க் இண்டெலிஜெண்ட் மேனேஜ்மெண்ட்) வழியே தேர்ந்தெடுக்கப்பட்டது. STRADA-ல் பர்ஃபாமென்ஸ் டிராக்‌ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் பயன்பாட்டால், ரியர் வீல் சறுக்குவதை குறைக்க முடியும். எனவே, பர்ஃபாமென்ஸ் டிராக்‌ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் இருப்பது பாதுக்காப்பானது.

ஸ்போர்ட் மோடில், பர்ஃபாமென்ஸ் டிராக்‌ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் வேகமெடுக்கும். அசுர வேகத்தில் வாகனம் பறக்கும். இதிலும், பாதுகாப்பான புதுவித அனுபவத்தை கொடுக்கும்.

CORSA-ல் பர்ஃபாமென்ஸ் டிராக்‌ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் ரியர்-வீல் சறுக்கல் ஏற்படாமல் இருக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ஓட்டுனரின் பர்ஃபாமன்ஸ் சீராகும். பர்ஃபாமென்ஸ் டிராக்‌ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் பொருத்தப்படுவதால், முன்பிருந்த ஹூரக்கன் ஆர்.டபிள்யு.டி மாடல்களைவிட 30% அதிக சீரான ஓட்டத்தை பெற்று தந்துள்ளது. கார்னர்-எக்ஸிட் டிராக்‌ஷன் 20% அதிகமாகவும், ஓவர்ஸ்டீர் 30% அதிகமாகவும் ஏற்பட்டுள்ளது.

ஹூரக்கன் ஈ.வி.ஓ ஆர்.டபிள்யு.டி வாகனத்தின் ஹைப்ரிட் சஸ்ஸிஸ், எடை குறைவான அலுமினியம் மற்றும் கார்பன் ஃபைபர் ஆகியவற்றை அலுமினியம் மற்றும் தெர்மோபிளாஸ்டிக் பிசின் பகுதியுடன் இணைக்கிறது ஒருங்கிணைக்கிறது, மொத்த எடை 1,389 கிலோவுக்கு நிகரான 2.28 kg/hp பவர் உருவாகும். முன்/பின் எடை பிரிவு விகிதம் 40/60 இருப்பதனால், ஹூரக்கன் ஈ.வி.ஓ ஆர்.டபிள்யு.டி வாகனத்தின் சஸ்பென்ஷன் டபுள் விஷ்போனாக உள்ளது. மேலும், லாம்போர்கினியின் டைனமிக் ஸ்டியரிங் (LDS) எனப்படுவது சிறந்த ஓட்டத்திற்கு பயன்படும். மேலும், 7-ஸ்பீடு டூயல் க்ளட்ச் கியர் பாக்ஸ் வேகமான கியர் மாற்றத்துக்கு ஏதுவானது. 19” கரி ரிம்ஸ், பிரெல்லி பி ஜீரோ டையர், கிராஸ்-ட்ரில்ட் ஸ்டீல் பிரேக் அமைக்கப்பட்டுள்ளது. தேவையென்றால், 20” ரிம்ஸ் மற்றும் கார்போ-செராமிக் பிரேக் பயன்படுத்தலாம்.

புதுமையான டிசைன் – அட்டகாசமான செயற்திறன்

வழக்கமான தி லாம்போர்கினி வி-10 வாகனங்களைப்போன்ற தரத்தை ஹூரக்கன் ஈ.வி.ஓ ஆர்.டபிள்யு.டி வாகனங்கள் கொண்டுள்ளன. அட்டகாசமான முன், பின் தோற்றங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஹூரக்கன் ஈ.வி.ஓ 4டபிள்யு.டி வாகனத்துடன் ஒப்பிடும்போது, இந்த வாகனம் தனித்துவமான தோற்றத்தைக் கொண்டுள்ளது. மேலும், ஹூரக்கன் ஈ.வி.ஓ ஆர்.டபிள்யு.டி வாகனங்களின் முன் பகுதியில் உள்ள பிரிவு பகுதி காற்றை உள்ளே அனுமதிக்க கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கருப்பு நிறத்திலான ரியர்-பம்பர் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ளது.

உட்பகுதியில் உள்ள காக்பிட்டில், எச்.எம்.ஐ 8.4” டச்-ஸ்க்ரீன் பொருத்தப்பட்டுள்ளது. காரின் நடுப்பகுதியில் அமைந்துள்ள இந்த டச்-ஸ்க்ரீன் காரை கட்டுபாட்டில் இயக்க உதவும். மேலும், இண்டெர்நெட் வசதி, ஆப்பிள் கார்ப்ளே, டெலிபோன் கால் வசதி ஆகியவை இதில் அடங்கும்.

லாம்போர்கினியின் உள் மற்றும் வெளி பகுதிகளில், அட் பர்ஸோனாம் ப்ரோகிராம் அமைக்கப்பட்டுள்ளது. இது, ஹூரக்கன் ஈ.வி.ஓ ஆர்.டபிள்யு.டி வாகனங்களின் தனித்துவமான நிறங்களை, ஸ்டைல்களை தேர்ந்தெடுக்க உதவுகிறது. காரின் வடிவத்துக்கு ஏற்ற நிறங்களை செட் செய்ய, உள் மற்றும் வெளி பகுதிகளில் அதற்கேற்ப நிறங்கள் பூசப்பட்டுள்ளது.

தி லாம்போர்கினி ஹூரக்கன் ஈ.வி.ஓ ஆர்.டபிள்யு.டி வாகனத்தின் விலை, இந்திய அளவில் 3.22 கோடி ரூபாய் மதிப்பில் இருந்து தொடங்குகிறது (எக்ஸ்-ஷோரூம்).

For more information on Lamborghini India, please visit:

Lamborghini India Official Website: www.mumbai.lamborghini/
Lamborghini India Official Website: www.delhi.lamborghini/
Lamborghini India Official Website: www.bengaluru.lamborghini/

Lamborghini India instagram : www.instagram.com/lamborghinimumbai/
Lamborghini India instagram : www.instagram.com/lamborghinidelhi/
Lamborghini India instagram : www.instagram.com/lamborghinibengaluru/
Lamborghini India facebook: www.facebook.com/lamborghiniindia/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *