சென்னையில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் மிகத் தீவிரமாக அதிகரித்து வரும் நிலையில் கட்டுப்படுத்தும் பொருட்டும், மருத்துவ வல்லுனர்களின் ஆலோசனைப் படியும் ஜூன் 19ம் தேதி முதல் ஜூன்30ம் தேதி வரை முழு ஊரடங்கு செயல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

  • வாடகை ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியார் வாகனங்கள் இயங்க அனுமதி இல்லை.
  • அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் அரசு அலுவலகங்கள் 33 சதவிகித பணியாளர்களுடன் செயல்படும்
  • இந்த ஊரடங்கு காலத்தில் செயல்படுத்த இருக்கும் புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன் படி அத்தியாவசியப் பொருட்களான பால், மளிகைக் கடைகள் காலை 6 மணி முதல் 2மணி வரை செயல்படும்.
  • கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பணியாளர்கள் பணிக்கு வர விலக்கு அளிக்கப்படும். ரேஷன் கடைகள் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்படும்.
  • காய்கறி, பழங்கள் ஆகியவை நடமாடும் கடைகள் மூலம் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டும் செயல்பட அனுமதி.
  • அத்தியாவசியப் பொருட்களை வாங்கும் பொதுமக்கள், வசிக்கும் இடத்திற்கு அருகிலேயே வாங்கிக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  • உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி. தேநீர் கடைகள் இயங்க அனுமதி கிடையாது.
  • ஆன்லைன் சேவைகளில் உணவுப் பொருட்கள் டெலிவரிக்கு மட்டும் அனுமதி முதியோர், மாற்றுத்திறனாளி, ஆதரவற்றோர் இல்லங்கள், முதியோர் மற்றும் நோயாளிகளுக்கு உதவி புரிபவர்களுக்கு அனுமதி.
  • மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகளுக்கு அனுமதி வழங்கப்படும்.
  • சரக்கு போக்குவரத்து,அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களுக்கு எவ்வித தடையும் கிடையாது.
  • சென்னையிலிருந்து வெளியூர் செல்ல திருமணம், மருத்துவம், இறப்பு ஆகிய காரணங்களுக்கு மட்டுமே இ-பாஸ் அனுமதி ரயில்கள், விமானங்கள், கப்பல்களுக்கு தற்போதுள்ள நடைமுறையே தொடரும் என தமிழக அரசு அறிவித்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • அம்மா உணவகங்கள் மற்றும் ஆதரவற்றோருக்காக அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளால் நடத்தப்படும் சமையல் கூடங்கள் வழக்கம் போல் செயல்படும்.
  • தொண்டு நிறுவனங்கள் உரிய அனுமதியுடன் இயங்கலாம்.
  • அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள்,நீதித்துறை மற்றும் நீதிமன்றங்கள் ஆகிய துறைகள் இயங்க அனுமதி பணி இடங்களிலேயே தங்கியிருந்து செய்யும் கட்டுமானப் பணிக்கு அனுமதி.
  • தனிமைப்படுத்தப்பட்டவர்கள் அதிகம் உள்ள இடங்களில் ரேஷன் கடைகள் செயல்படாது. அரசின் சலுகைகள் பணியாளர்களால் நேரடியாக வழங்கப்படும்.
  • பெட்ரோல் பங்குகள் சமூக இடைவெளியுடன் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்படும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *