கடந்த அக்டோபர் மாதம் மிகப்பெரிய தள்ளுபடி விற்பனையான “பிக் பில்லியன் டே” யை அறிவித்த ஆன்லைன் சில்லறை வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட், அடுத்த 6 மாதத்திற்குள் மீண்டும் ஒரு “பிக் பில்லியன் டே”வை நடத்த உள்ளதாக இந்நிறுவனத்தின் தலைவர்கள் சச்சின் மற்றும் பின்னி பன்சால் தெரிவித்துள்ளனர்.

“பிக் பில்லியன் டே”அன்று ஒரு நாள் மட்டும் பிளிப்கார்ட் இணையதளம் மூலமாக 1.5 மில்லியன் வாடிக்கையாளர்கள்100 மில்லியன் டாலர் மதிப்பிற்கும் அதிகாமன பொருட்களை வாங்கியுள்ளனர். இதில் பலர் பல விதமான குழப்பங்களையும், பிரச்சனைகளை சந்தித்ததனர்.

அடுத்த இந்த பிக் பில்லியன் டே-விற்காக இந்நிறுவனம் தனது தொழில்நுட்ப பிரிவில் பணியாளர்களை அதிகரித்து மேலும் தொழில்நுட்ப வலிமையை இரட்டிப்பாக்க திட்டமிட்டுள்ளது.

இது பற்றி நிறுவனர்களில் ஒருவரான, சச்சின் பன்சால் கூறும்போது “பிக் பில்லியன் டே எங்களுக்கு மிகப்பெரிய பாடங்களை கற்றுக்கொடுத்தது, மேலும் அடுத்த பிக் பில்லியன் டேவில் இதுபோன்ற பிரச்சனைகள் வரக்கூடாது என்பதற்காக தொழில்நுட்பம் சார்ந்த அனைத்து பிரிவுகளையும் மேம்படுத்தியுள்ளோம்” என தெரிவித்தார்.

English Summary: Next Big Billion Day will be soon in Flipkart.