LPG டேங்கர் லாரிகள் முதலாளிகளின் வேலைநிறுத்தத்தால் உள்நாட்டு மற்றும் வணிகம் சார்ந்த LPG சேவை தடைபட்டுள்ளது.

தெற்கு மண்டலத்தின் LPG போக்குவரத்து ஆபரேட்டர் கூட்டமைப்பில் 3,200 டேங்கர் உரிமையாளர்கள் கடந்த சனிக்கிழமை முதல் வேலைநிறுத்தம் செய்துவருகின்றனர். பொதுதுறை எண்ணெய் நிறுவனமான IOC, HPC, BPC போன்ற நிறுவனங்கள் தங்களுக்கு போக்குவரத்துக்கு உண்டான தொகையை உயர்த்தி தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன.

எண்ணெய் நிறுவனங்கள் ஏற்கனவே ஒரு டன்னை ஒரு கிலோமீட்டர் தூரம் எடுத்துச்செல்ல ரூ.2.94 தருகின்றன. டேங்கர் லாரி உரிமையாளர்கள் ஒரு டன்னை ஒரு கிலோமீட்டர் தூரம் எடுத்துச்செல்ல ரூ.3.06 தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன.

இந்த வேலைநிறுத்தம் மேலும் தொடரும்பட்சத்தில் LPG உள்நாட்டு மற்றும் வணிகம் சார்ந்த சேவை பாதிக்கப்படும். அனேகமாக இன்று பேச்சு வார்த்தையில் சமரசம் ஏற்படும் என்று எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

English Summary: LPG Tankers strike hits domestic supply in Tamilnadu.