இந்தியாவில் உள்ள அனைவருக்கும் ஆதார் கார்டு என்பதே மிகப்பெரிய அடையாள ஆவணமாக உள்ளது. இந்த ஆதார் கார்டு இல்லாமல் எதுவுமே கிடைக்காது என்ற நிலை தற்போது வந்து விட்டது. ஆதார் என்பது பணம் தொடர்பான ஒரு ஆவணமாகவும் தற்போது உள்ளது.

வங்கிகளில் ஆதார் என்பதே மிக முக்கியமான விஷயமாக இருக்கின்றது. எனவே ஆதார் கார்டில் உங்களின் தனிநபர் விவரங்களை அப்டேட் ஆக எப்போதும் வைத்திருக்க வேண்டும்.

இந்நிலையில், ஆதார் அட்டையில் பெயர்,பிறந்த தினம் மற்றும் முகவரி ஆகியவற்றை திருத்துவதற்கு 50 ரூபாய் வசூலிக்கப்பட்டு வருகிறது. இ சேவை மையங்கள் ஆனாலும் சரி ஆன்லைன் மூலமாக ஆனாலும் சரி 50 ரூபாய் செலுத்த வேண்டும். தற்போது ஆன்லைன் மூலம் செய்யப்படும் திருத்தங்களுக்கு மூன்று மாதங்களுக்கு பணம் செலுத்த தேவையில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்த சேவையை ‘my Aadhaar’ எனும் இணையதளத்தில் மட்டுமே இலவசமாகப் பெற முடியும் என்றும், ஆதார் மையங்களில் நேரடியாக சென்று புதுபித்தால் வழக்கம்போல் ரூ.50 கட்டணமாக வசூலிக்கப்படும என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) லட்சக்கணக்கான மக்கள் பயனடையும் வகையில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. பயனாளர்கள் ‘myaadhaar.uidai.gov.in’ எனும் இணையத்தில் தங்கள் ஆதார் எண்ணைப் பயன்படுத்தி தங்களின் தரவுகளை புதுப்பித்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *