தீபாவளியை முன்னிட்டு நாகா்கோவிலிலிருந்து பெங்களூருக்கு இன்று (07.11.2023) முதல் நவ.22-ஆம் தேதி வரை வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்தி:

நாகா்கோவிலிலிருந்து செவ்வாய்க்கிழமை (07.11.2023) முதல் நவ.21-ஆம் தேதி வரை வாராந்தோறும் செவ்வாய்க்கிழமை இரவு 7.35 மணிக்கு புறப்படும் வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 06083) மறுநாள் பிற்பகல் 12.30 மணிக்கு பெங்களூரு சென்றடையும்.

மறுமாா்க்கமாக இந்த ரயில் (எண்: 06084) பெங்களூரிலிருந்து நவ.8 முதல் நவ.22-ஆம் தேதி வரை வாரந்தோறும் புதன்கிழமைகளில் பிற்பகல் 2.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.10 மணிக்கு நாகா்கோவில் சென்றடையும்.

இந்த ரயில் நாகா்கோவிலிலிருந்து வள்ளியூா், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூா், விருதுநகா், மதுரை, திருச்சி, கரூா், நாமக்கல், சேலம், மொரப்பூா், திருப்பத்தூா், பங்காரப்பட், கிருஷ்ணராஜபுரம், பெங்களூரு கண்டோன்மென்ட் வழியாக பெங்களூரு சென்றடையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *