Director-Jeethu-Josephத்ரிஷயம்’, பாபநாசம் படங்கள் உள்பட பல வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் ஜீத்துஜோசப் அவர்களின் அடுத்த படம் ‘லைஃப் ஆப் ஜோசுட்டி’. இந்த படத்தில் ‘ராஜ்ஜியம்’ படத்தில்  விஜயகாந்த் தம்பியாகவும் மற்றும் ஏராளமான மலையாள படங்களிலும் நடித்தவருமான முன்னணி நடிகர் திலீப்  முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.  இவருக்கு ஜோடியாக இந்த படத்தில் ரச்சனா நாராயணகுட்டியும் மற்றும் மற்றொரு முக்கிய வேடத்தில் கலாபவன் மணியும் இந்த படத்தில் நடித்துள்ளனர். அனில் ஜான்சன் இசையமைத்துள்ள இந்த படத்தை ஈராஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

இந்நிலையில் ‘லைஃப் ஆப் ஜோசுட்டி’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்புகள், போஸ்ட் புரடொக்ஷன் ஆகியவை முடிந்து தற்போது ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் வரும் செப்டம்பர் 18ஆம் தேதி ரிலீஸ் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜீத்து ஜோசப்பின் ‘த்ரிஷ்யம்’ மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, கன்னட, இந்தி ஆகிய மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு அனைத்து மொழிகளிலும் சூப்பர் ஹிட் ஆகியது. குறிப்பாக தமிழில் ‘பாபநாசம்’ என்ற பெயரில் ரீமேக் ஆன இந்த படம் உலக நாயகன் கமல்ஹாசனின் அற்புதமான நடிப்பால் சூப்பர் ஹிட் ஆகி, ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. ஜீத்து ஜோசப்பின் ‘த்ரிஷ்யம் படம் போலவே ‘லைஃப் ஆப் ஜோசுட்டி’ படமும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்று, அடுத்தடுத்து பல மொழிகளிலும் ரீமேக் செய்யப்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

English Summary:’Papanasam’ director’s next film release date.