மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைத்துள்ளது. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.42 குறைந்துள்ளது. அதே போன்று டீசல் விலையும் லிட்டருக்கு ரூ.2.25 குறைந்துள்ளது.

சர்வதேச கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ளதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமல் படுத்தப்படும் என்று எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

தமிழகத்தில் பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு ரூ.58.88 ஆகவும், டீசல் விலை ஒரு லிட்டருக்கு ரூ.48.91 ஆகவும் உள்ளது.

English Summary: Petrol and Diesel Price reduced.