முதல்வர் பன்னீர்செல்வம் ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கான பொங்கல் போனசை இன்று அறிவித்துள்ளார். ஆயிரம் ரூபாய் முதல், 3 ஆயிரம் ரூபாய் வரை போனஸ் என தமிழக முதல்வர் அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையின்படி, ஏ மற்றும் பி பிரிவு ஊழியர்களுக்கு தலா ஆயிரம் ரூபாயும், சி மற்றும் டி பிரிவினருக்கு 3 ஆயிரம் ரூபாயும் போனசாக கிடைக்கும்.