வங்கக்கடலில் ஒடிசா கடற்கரையில் இருந்து ஆந்திரா, தென் தமிழ்நாடு வரை குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதே போல் அரபிக்கடலில் லட்சத்தீவு, கேரளா, கர்நாடக கடற்கரை பகுதியில் மேலடுக்கு சூழற்சி உருவாகி இருக்கிறது.இதன் காரணமாக தமிழ்நாட்டில் சேலம், வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவள்ளூர் உள்ளிட்ட வடமாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு பலத்த மழை பெய்யும்.
தென் மாவட்டங்களில் பரவலாக பெய்து வரும் மழை 2 நாட்களுக்கு நீடிக்கும். நாளை வரை இந்த வானிலை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னையில் இன்று காலை லேசாக மழை தூறியது. தொடர்ந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை ஒரு சில இடங்களில் பெய்யக்கூடும. அரபிக்கடல் பகுதியில் உருவான மேலடுக்கு சூழற்சி காரணமாக தென் தமிழ் நாட்டில் பரவலாகவும், கேரளாவிலும் கர்நாடக கடற்கரை மற்றும் வடக்கு, தெற்கு உள் கர்நாடகாவிலும் மிக பலத்த மழை பெய்யும் என்றும் கேரளா, கர்நாடகாவில் 9–ந் தேதி வரை 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
English Summary : Weather Center announces rain for 2 days in Chennai.