rajinikanth-shankarசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் கூட்டணியில் உருவாகவுள்ள பிரமாண்டமான திரைப்படமான ‘எந்திரன் 2′ படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த படத்தில் ரஜினிக்கு வில்லனாக ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் அர்னால்ட் நடிப்பார் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்தின் நாயகி குறித்த முக்கிய தகவல் ஒன்று தற்போது வெளிவந்துள்ளது.

எந்திரன் 2′ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க எமிஜாக்சனுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்ததாகவும், பேச்சுவார்த்தைக்கு பின்னர் எமிஜாக்சன் இந்த படத்தில் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. எந்திரன்’ முதல் பாகத்தில் காஸ்ட்யூம் டிசைனராக பணிபுரிந்த ஹாலிவுட் காஸ்ட்யூம் டிசைனர் ஒருவர் இந்த படத்திலும் காஸ்ட்யூம் டிசைனராக பணிபுரிய உள்ளதாகவும், அவர் எமிஜாக்சனுக்குரிய காஸ்ட்யூம்களை தயார் செய்யும் பணிகளை தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் ‘எந்திரன் 2’ திரைப்படம் முழுக்க முழுக்க 3D கேமராவில் படமாக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவில் இதுவரை 3D கேமராவின் ஒரு முழு படம் வெளிவந்தது இல்லை. இதுவரை எடுத்த 3D படங்கள் அனைத்தும் 2D கேமராவில் எடுக்கப்பட்டு பின்னர் 3Dக்கு படத்தை மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படத்தில் ரஜினியின் இளையமகள் செளந்தர்யா இயக்கிய ‘கோச்சடையான்’ படத்தில் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பமான மோஷன் கேப்ட்சர் தொழில்நுட்பத்திலும் ஒருசில காட்சிகள் எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்தியாவிலேயே மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகவிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் 2016ஆம் ஆண்டு ஏப்ரலில் தொடங்கும் என கூறப்படுகிறது. தற்போது ரஜினிகாந்த் பா.ரஞ்சித் இயக்கி வரும் ‘கபாலி’ படத்தின் படப்பிடிப்பில் பிசியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English Summary: Rajinikanth, Shankar joins Endhiran 2 ‘Important Information about the film.