Vedhalam-Movie-Copy‘வீரம்’ சிவா இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் ‘வேதாளம்’ படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் இசை வெளியீடு குறித்த தகவல்கள் தற்போது வெளிவதுள்ளது. இந்த படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் அவர்கள் தீவிர சாய்பாபா பக்தர் என்பதால் இந்த படத்தின் அனைத்து அறிவிப்புகளும் வியாழக்கிழமைகளில் வருவது வழக்கம்.

ஆனால் இந்த வியாழக்கிழமை செண்டிமெண்ட் இசையமைப்பாளர் அனிருத்துக்காக முதல்முறையாக மீறப்பட்டுள்ளது. அனிருத்தின் பிறந்த நாள் வரும் 16ஆம் தேதி வெள்ளிக்கிழமை வருவதால், அன்றைய தினத்தில் அவருக்கு பிறந்த நாள் பரிசாக இருக்கும் வகையில் அதே தேதியில் இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டை நடத்த படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். 16ஆம் தேதி அதிகாலை 12 மணிக்கு ‘வேதாளம்’ படத்தின் பாடல்கள் இணையதளத்தில் ரிலீசாகவுள்ளது. இந்த தகவலை அனிருத் தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார்.

ஏற்கனவே ‘வேதாளம்’ படத்தின் டீசர் மற்றும் போஸ்டர்கள் அஜீத் ரசிகர்களால் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இந்த படத்தின் பாடல்களையும் சிறப்பாக வரவேற்ற அஜீத் ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். அஜீத், ஸ்ருதிஹாசன், லட்சுமிமேனன், கபீர்சிங், சூரி, தம்பிராமையா, ராகுல்தேவ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். வரும் தீபாவளி தினத்தில் இந்த படம் ரிலீஸாகவுள்ளது.

English Summary: Ajith’s vedhalam movie Audio Realese Date Announced.