IAS_Coach0406UPSC எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஐ.ஏ.எஸ் முதல்நிலை தேர்வில் (Preliminary) வெற்றி பெற்றவர்கள், தமிழக அரசின் கீழ் இயங்கும் பயிற்சி மையத்தில், முதன்மை தேர்வுக்கான (MAINS EXAM) பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம் என்றும், விருப்பமுள்ளவர்கள் நாளைக்குள் அதாவது அக்டோபர் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசின் கீழ் இயங்கும் அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையம் வெளியிட்ட நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது: UPSC சிவில் சர்வீசஸ் தேர்வின் இரண்டாவது கட்டமான, முதன்மை தேர்வுக்கான பயிற்சியில் சேர விண்ணப்ப படிவங்கள் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. விண்ணப்பங்களை 15-ம் தேதி வரை, பி.எஸ்.குமாரசாமி ராஜா சாலை, காஞ்சி வளாகத்தில் உள்ள குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையத்தில் பெறலாம்.

பெறப்படும் விண்ணப்பங்களின் அடிப்படையில் இம்மாதம் 16, 17 ஆகிய தேதிகளில் சேர்க்கை நடைபெறும். பல்வேறு பிரிவுகளின் கீழ் 225 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவர். இப்பயிற்சி மைய மாணவர்களை தவிர, இதர பயிற்சி மையத்தில் பயின்றவர்கள், தனியாக தேர்வு எழுதி முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களும் சேரலாம். பயிற்சிக் காலத்தில் இலவச விடுதி மற்றும் உணவு வழங்கப்படும். மேலும் பயிற்சியின் போது மாதம் ரூ.3 ஆயிரம் உதவித்தொகை தமிழக அரசால் வழங்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு, அகில இந்திய குடிமைப்பணித் தேர்வு பயிற்சி மைய முதல்வரை 044-24621475 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். அல்லது www.civilservicecoaching.com என்ற இணையதள முகவரியில் விவரங்களை அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

English Summary: Scholarship with Free Coaching for IAS Exam Writers.