Selvamagal-Semippu-Thittam-பெண் குழந்தையை வைத்திருக்கும் பெற்றோர்கள், அந்த குழந்தையின் கல்வி, திருமணம் போன்ற எதிர்கால செலவிற்கு சேமித்து வைக்கும் வகையில் ‘செல்வமகள் சேமிப்பு திட்டம்’ என்ற திட்டத்தை மத்திய அரசு கடந்த ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்திற்கு நாடு முழுவதும், குறிப்பாக தமிழகத்தில் பெரும் வரவேற்பு கிடைத்தது. இதுவரை செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் தமிழகத்தில் மட்டும் 11 லட்சம் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்திய பத்திரிகை தகவல் அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது: பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு செல்வமகள் சேமிப்பு திட்டத்தை மத்திய அரசு கடந்த ஜனவரியில் அறிமுகப்படுத்தியது. இந்த சேமிப்புத் திட்டம் அஞ்சலகங்கள் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகள் சேமிப்பு கணக்குகளை தொடங்கலாம். இந்த திட்டத்துக்கு தமிழகத்தில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

இதுவரை 11 லட்சம் கணக்குகள் இத்திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டுள்ளன. இதன் அறிமுக சலுகையாக 12 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகள் வரும் டிசம்பர் 1-ம் தேதி வரை கணக்கு தொடங்கலாம். இத்திட்டத்தில் தங்கள் பெண் குழந்தைகளை இணைத்து பொதுமக்கள் பயனடையலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

English Summary:Tamil Nadu accounts for 11 million of the savings plan Selvamagal.