சென்னை எழும்பூா் வழியாக ராமேஸ்வரம் செல்லும் ஹம்சாஃபா் விரைவு ரயிலின் வழித்தடம், மே 6 -ஆம் தேதி முதல் மாற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே சார்பில் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருச்சி கோட்டத்தில் உள்ள ரயில் வழித்தடங்களில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. இதன் காரணமாக, ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் ஹம்சாஃபர் விரைவு ரயிலின் (வண்டி எண்: 20973) வழித்தடம் நாளை மறுநாள் (மே 6) முதல் வருகிற 27-ம் தேதி வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த ரயில் வாரந்தோறும் சனிக்கிழமை அன்று அஜ்மீரில் இருந்து இரவு 8.20 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம், கடலூர், விருத்தாச்சலம் வழியாக ராமேஸ்வரத்தை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *