கடந்த சில நாட்களுக்கு முன்னர் எம்.பி.பி.எஸ் படிப்புக்கு விண்ணப்பம் செய்த மாணவர்களுக்கான ரேண்டம் எண் வெளியான நிலையில் தற்போது பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான ரேண்டம் எண் அண்ணா பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. ஒரே கட் ஆப் மதிப்பெண் பெற்றவர்களை வரிசைப்படுத்தி இந்த ரேண்டம் எண் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..

கடந்த ஆண்டு 124 பேர்களுக்கு மட்டுமே ரேண்டம் எண் பயன்படுத்தப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு விண்ணப்பித்த 1,54,738 பேருக்கும் ரேண்டம் எண் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ரேண்டம் எண்களை மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிகாரபூர்வ இணையதளமான www.annauniv.edu என்ற இணைதளத்தில் சென்று பார்க்கலாம்.

மேலும் ஜூன் 19ஆம் தேதி தரவரிசைப்பட்டியல் வெளியிடப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

English Summary : Random Number for Engineering Students was released in Anna university website.