திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக சந்தீப் நந்தூரி பொறுப்பேற்றார் .சென்னை மாநகராட்சி உதவி ஆணையராக (கல்வி) பணியாற்றிய கந்தசாமி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக கடந்த 31-08-2017-ம் ஆண்டு பொறுப்பேற்றார். தொடர்ந்து, 3 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் இவர், குறைதீர்வு தனி அதிகாரியாக நேற்று இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதையடுத்து, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *