santhanam‘இனிமே இப்படித்தான்’ என்ற படத்தின் மூலம் கதாநாயகன் அந்தஸ்துக்கு உயர்ந்துவிட்ட நடிகர் சந்தானம், மீண்டும் கதாநாயகனாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த படத்தை லொள்ளுசபா ராம்பாலா இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க முடிவு செய்துள்ளது.

இந்த படம் காதல், காமெடி மட்டுமின்றி பேய்ப்படமாக இருக்கும் என படக்குழுவினர் தரப்பில் இருந்து கூறப்படுகிறது. மேலும் முதல்முறையாக சந்தானம் பேயாகவும் இந்த படத்தில் நடிக்கவுள்ளார். சமீபத்தில் சூர்யா ‘மாஸ்’ உள்பட கோலிவுட்டில் பேய்ப்படங்கள் வெற்றி பெற்றுக்கொண்டு வரும் நிலையில் சந்தானமும் தற்போது பேய்பட சீசனில் நுழைந்துவிட்டார்.

இந்நிலையில் ஆர்யாவுடன் சந்தானம் நடித்த ‘வாசுவும் சரவணனனும் ஒண்ணா படிச்சவங்க’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் ரிலீஸாகவுள்ளது. இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English Summary:Santhanam acting a hero role in Ghost movie