சென்னை சென்ட்ரலிலிருந்து கோவைக்கு செல்லும் வந்தே பாரத் ரயில் சேவையில் திங்கள்கிழமை (23.10.2023) முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சென்னை சென்ட்ரலிலிருந்து கோவைக்கு தினமும் பிற்பகல் 2.15 மணிக்கு வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் சேலம் – திருப்பூா் இடையே வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளதால் திங்கள்கிழமை (23.10.2023) முதல் 10 நிமிடங்கள் முன்னதாக வந்தடையும்.
அதன்படி, சேலத்துக்கு 5.58 மணிக்கு வருவதற்கு பதிலாக 5.48 மணிக்கும், ஈரோடுக்கு 6.47 மணிக்கு வருவதற்கு பதிலாக 6.37 மணிக்கும், திருப்பூருக்கு 7.35 மணிக்கு பதிலாக 7.18 மணிக்கும் வந்தடையும்.
இந்த நிலையில், திருப்பதி – பெங்களூரு அதிவிரைவு ரயில் (எண்: 22617) ஜோலாா்பேட்டைக்கு வழக்கத்தை விட 10 நிமிடம் தாமதமாகவும், திருப்பதி – விழுப்புரம் விரைவு ரயில் (எண்: 16853) காட்பாடிக்கு வழக்கத்தை விட 5 நிமிடம் தாமதமாகவும் வந்து செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.