ஏ.எம்.ஆர்.ரமேஷ் இயக்கி வரும் ‘ஒரு மெல்லிய கோடு’ திரைப்படம் சமீபத்தில் மர்மமான முறையில் மரணம் அடைந்த சுனந்தாபுஷ்கர் தொடர்பான கதை என்றும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்த படத்தில் அர்ஜூன், ஷாம், மனிஷா கொய்ராலா உள்பட பலர் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தில் இடம்பெறும் ஒரு திருமண காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டதாக படக்குழுவினர் தரப்பில் இருந்து செய்திகள் வெளிவந்துள்ளது. ஷாம் மற்றும் மனிஷா கொய்ராலா திருமணம் செய்வது போன்ற காட்சியை படமாக்கியதாகவும், இந்த திருமண காட்சி படத்தில் மிகவும் முக்கியமானது என்றும் கூறப்படுகிறது.

மனிஷா கொய்ராலாவுடன் நடித்த அனுபவம் குறித்து ஷாம் கூறியபோது, ‘பம்பாய், இந்தியன் போன்ற படங்களில் நடித்தபோது இருந்த எனர்ஜி அப்படியே இன்னும் மனிஷாவிடம் இருப்பதாகவும், படக்குழுவினர்களுக்கு அவர் மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்து வருவதாகவும் கூறியுள்ளார்.

இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் நடைபெறும் ஒரு கொலையை துப்பறியும் அதிகாரியாக ஆக்ஷன் கிங் அர்ஜூன் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

English Summary: Shaam and Manisha Koirala marriage scene in a film “Oru Melliya Kodu”. This scene is important in this film. Action King “Arjun” does important role in this film.